ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட பொலிஸ் பிரிவினர் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவரது வீட்டுக்கே சென்று 9 மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
காலை 9 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் இவ்விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.
பதவியிலிருந்த காலத்திலும் தனக்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தனக்கு யாரும் தகவல் தரவில்லையெனவும் மைத்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment