2011 ம் ஆண்டுக்குப் பின் தாம் முதற்தடவையாக இன்று ஒரு வாக்காளனாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
குறித்த காலப் பகுதியில் கடமை நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற போதிலும், இன்று தான் ஒரு வாக்காளானாக தனது கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 65 வயதாகியும் தன்னால் வாக்களிப்பில் ஈடு பட முடியும் எனவும், வாக்குச்சாவடிகள் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment