கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் இல்லாத வகையில் 20 - 25 லட்ச சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை இழந்துள்ளதாகவும் அதனை சரி செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
தெற்கின் சிங்க - பௌத்த மக்களின் வாக்குகளே இவ்வாறு இழக்கப்பட்டிருப்பதாகவும் தென்னிலங்கை மக்களைக் கவரக் கூடிய வகையிலான 'வேட்பாளர்' இல்லாமையும் அதற்கான காரணமாக இருந்தது எனவும் ரணில் தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஊடாக சஜித் அணி போட்டியிடுகின்ற போதிலும் இம்முறை தமது கட்சி வெற்றியீட்டும் என ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment