மூன்றிலிரண்டு தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது பொதுஜன பெரமுன. 146 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் பிராந்திய கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் பேசி நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தொகுதிகளின் தேர்தல் முடிவுகளின் படி பெரமுன 146 ஆசனங்களைப் பெற்றுள்ள அதேவேளை சமகி ஜனபல வேகய 54 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 11 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனமும் பெற்றுள்ளன.
நேரடியாகத் தமது கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காது விடினும் மாற்று வழியில் அதைப் பெறுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஏலவே மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment