19ம் திருத்தச் சட்டத்தை நீக்கியதும் பசில் ராஜபக்ச நாடாளுமன்றுக்குள் பிரவேசிப்பதுடன் முக்கிய அமைச்சுப் பதவியொன்றையும் வகிப்பார் என பெரமுன ஆதரவு தளங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதன் பின்னணியிலேயே பசிலுக்கு தற்போதைய தடை இருக்கும் அதேவேளை பெரமுன அரசு உடனடியாக அதனை நீக்குவதற்கான நடவடிக்கையெடுக்கவுள்ளது. அத்துடன் அமைச்சரவை விஸ்தரிப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னணியில் சிறுபான்மை சமூக கட்சிகளும் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment