19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி அமைச்சரவையை இன்னும் பெருக்குவதுற்கு ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கபினட் அமைச்சு பதவிகள் 30 ஆகவும், இராஜாங்க அமைச்சு பதவிகள் 40 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் பெரமுனவில் உள்ள பலருக்கு அமைச்சுப் பதவிகள் தேவைப்படுவதால், அந்தத் தடையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் நடுப்பகுதியில் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான யோசனையை முன் வைக்கப் போவதாக ஏலவே நீதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment