2020ம் ஆண்டு 150 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் 40 முதற் சுற்றிலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
அரசியல் கட்சியாக இயங்குவதற்கான அடிப்படைத் தகுதிகள் இல்லாத நிலையில் குறித்த கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து, அதனை தேர்தல் காலத்தில் 'கை - மாற்றி' அதனூடாக பயன்பெறும் வழக்கம் வளர்ந்து வரும் நிலையில் புதிய அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment