14 பேருடன் 'பிடி' வைத்துள்ள மைத்ரி; இன்று விசேட கூட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 9 August 2020

14 பேருடன் 'பிடி' வைத்துள்ள மைத்ரி; இன்று விசேட கூட்டம்

பொலன்நறுவ மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலி சிறிசேன, தனது கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளார். இப்பின்னணியில் தமது கட்சிக்காரர்களை அழைத்து இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக தனித்தும், பெரமுனவுடன் இணைந்தும் அக்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் இம்முறை நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க போன்ற முன்னாள் மஹிந்த எதிர்ப்பாளர்களும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


அங்கஜன் மற்றும் காதர் மஸ்தான் போன்றோரும் ஸ்ரீலசுகட்சி சார்பிலேயே போட்டியிட்டு வென்றுள்ள அதேவேளை பெரமுன நாடாளுமன்ற பட்டியலிலேயே இணைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment