இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன, ஆகக்குறைந்தது 130 ஆசனங்களைக் கைப்பற்றுவது உறுதியென தெரிவிக்கிறார் அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச.
பெரமுன பெரும்பான்மையைப் பெற்று சட்டத்திருங்கள் பல உருவாக்கப்படும் என நம்பப்படுகிறது. வெளிநாட்டு பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடும் அதில் ஒன்று என அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.
தொடர்ந்தும் பெரமுன நடவடிக்கைகளை வழி நடாத்தி வரும் பசில் ராஜபக்ச, தமது கட்சியின் வெற்றி உறுதியெனவும் ஆகக்குறைந்தது 130 - 135 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment