தேசியப் பட்டியலும் வேண்டாம்: UNPஐ விட்டு விலகினார் ரோஹித! - sonakar.com

Post Top Ad

Thursday, 9 July 2020

தேசியப் பட்டியலும் வேண்டாம்: UNPஐ விட்டு விலகினார் ரோஹித!

https://www.photojoiner.net/image/A2TevBu6

ஐக்கிய தேசியக் கட்சியின் போக்கில் அதிருப்தியின் காரணமாக கட்சியிலிருந்து விலகிக் கொள்வதுடன் தனக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம.

நாட்டை முன்நிறுத்திய செயற்திட்டத்தையே தான் விரும்புவதாகவும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் திருப்தியாக இல்லையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

ரணில் தரப்போடு அதிருப்தியடைந்த நிலையில் சஜித் அணி தனிக் கட்சியாக தேர்தலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment