அரசில் இணைய UNPக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: யாப்பா - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 July 2020

அரசில் இணைய UNPக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: யாப்பா


மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன.

பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தனித்துப் பெறும் என்றே இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரணில் - சஜித் அணிகள் தனித்துப் போட்டியிடும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன எண்ணிக்கையிலும் பாதிப்பு ஏற்படும் என்று கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment