மீள் கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் 200 மில்லியன் ரூபா ஊழல் வழக்கிலிருந்து அதன் முன்னாள் தலைவர் டிரன் அலஸ், விடுதலைப் புலிகளின் எமில் காந்தன் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களக்கு வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதாகக் கூறி இப்பெருந்தொகை பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
எனினும், சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரமில்லாததால் வழக்கைக் கைவிடுவதாக பிரதி சட்டமா அதிபர் நீதிபதிக்கு தெரிவித்ததன் பின்னணியில் இன்று வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment