கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து கடந்த 27ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது இன்று கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு ஏனைய கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் பரிசோதனை நடாத்தப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக ஜிந்துபிட்டியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருக்கு ஐந்து நாட்களின் பின் கொரோனா இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இப்பின்னணியில் முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்த 154 பேர் நேற்று வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment