நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 5000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட வேண்டும் என தமது அமைப்பு ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்ததற்கான அவசியம் தற்போதாவது உணரப்பட்டாக வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
தற்போது கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஆரம்பித்துள்ள கொரோனா தொற்று இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தக் கூடும் எனவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை அவசியம் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த மையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருடன் தொடர்பிலிருந்தவர்கள், அவரை சந்தித்தவர்கள் மற்றும் அவர் பயணித்த இடங்கள் குறித்தும் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வரும் அதேவேளை இதுவரை 252 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment