நௌபர் மௌலவியே சஹ்ரானை வழி நடாத்தியதாக சாட்சியம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 July 2020

நௌபர் மௌலவியே சஹ்ரானை வழி நடாத்தியதாக சாட்சியம்!


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அரச புலனாய்வுச் சேவை சஹ்ரானுடைய நடவடிக்கைகள் பற்றி அறிந்திருந்த அதேவேளை, இது குறித்து நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் தெளிவான அறிக்கைகள் வழங்கப்பட்டிருப்பதாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கப்பட்டுள்ள அதேவேளை கட்டாரில் இருந்து இயங்கிய நௌபர் மௌலவி எனும் நபரே குறித்த தாக்குதல் திட்டத்தின் மூளையாகச் செயற்பட்டவர் எனவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அன்டன் பாலசிங்கம் போன்று இந்நபரே வெளிநாட்டில் இருந்து கொண்டு மூளைச்சலவைப் பணிகளை செய்து வந்ததாகவும் 2017ன் பின்ன ஐ.எஸ் அனுதாபிகள் மத்தியில் சஹ்ரான் ஒரு ஹீரோவாக கணிக்கப்பட்டதாகவும் காத்தான்குடி மோதலின் பின் நாரம்மல பகுதியில் மனைவியின் வீட்டிலேயே ஒளிந்திருந்ததாகவும் இது பற்றியும் அரசாங்கம் நன்கறிந்திருந்ததாகவும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment