சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய, தேர்தல் பிரச்சாரத்தின் போது பச்சை நிறத்தைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி தேர்தல் ஆணைக்குழுவை நாடியுள்ளார் ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம்.
சமகி ஜனபலவேகயவின் நிறம் நீலம் எனவும் அதையே அக்கட்சியினர் உபயோகப்படுத்த வேண்டும் எனவும் அகில விராஜ் தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுத் தாம் பிரியவில்லை மாறாக, அந்தப்பக்கமே ஒரு சிறு குழுவினர் பதவிக்காக அடம் பிடித்துக் கொண்டிருப்பதாக சஜித் அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment