அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்ததன் பின்னணியில் உனவட்டுன ரயில் நிலைய பொறுப்பதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை கொரோனா தொற்றிருப்பதற்கான அறிகுறியைக் காட்டவில்லையாயினும் பாதுகாப்பு நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ரயில் நிலையத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment