இலங்கையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை தகுதியுள்ளவர்களுக்கு தகுதியான பதவிகள் கிடைக்காமல் போவதே என தெரிவிக்கிறார் பாட்டாளி சம்பிக்க ரணவக்க.
இந்த பாரம்பரியத்தை அச்சொட்டாகப் பின்பற்றுவதே பெரமுனவின் அடித்தளம் எனவும் தெரிவிக்கின்ற அவர் 70 வயதைத் தாண்டிய ராஜபக்ச சகோதரர்களைத் தாண்டி அந்தக் கட்சியில் யாரும் எதையும் சாதிக்க முடியாதளவு அது ஒரு திறந்த சிறைக்கூடம் என விளக்கமளித்துள்ளார். அதற்கேற்க அதனை ஒரு குடும்ப அமைப்பாகவே உருவாக்கியுள்ளார்களே தவிர அரசியல் கட்சியன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியே, ராஜபக்ச சகோதரர்களின் காலம் தாண்டினாலும் அதற்கடுத்ததாக நாமல், யோசித்த, சஷேந்திர என அதே குடும்பத்தில் வாரிசுகள் காத்திருப்பதாகவும் இவ்வாறான கட்டுமானத்தால் நாட்டுக்கு எதுவும் நடக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர் சமகி ஜன பல வேகய ஊடாக மாற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment