நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்சவுடனும் ஜனாதிபதியான அவரது சகோதரன் கோட்டாபே ராஜபக்சவுடனும் தனக்கிருக்கும் நெருக்கத்தை மேலும் வெற்றிகரமாக்க தன்னிடம் திட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார் கருணா அம்மான்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்குக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கவும் அதே போன்று கல்முனை பிரதேச அதிகாரத்தைத் தமக்குத் தரவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏலவே இணங்கியுள்ளதாக கருணா மேலும் விளக்கமளித்துள்ளார்.
மஹிந்த சொன்னால் அதைக் கட்டாயம் நிறைவேற்றுவார் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment