இராமாயணம் எனும் பிரபல காப்பியத்தின் பிரதான கதாபாத்திரமான இராமன் பிறந்த அயோத்தி இந்தியாவில் இல்லை, அது நேபாளின் தோரி பிரதேசத்தில் உள்ளது என தெரிவித்து வாத - விவாதத்தைத் தோற்றுவித்துள்ளார் நேபாள் பிரதமர்.
அவரது கருத்துப் படி, இராமனின் தந்தை தசரதன் பிறந்த மற்றும் ஆட்சி நடாத்திய பிரதேசம் நேபாளில் இருக்கும் போது இராமன் மாத்திரம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பிறக்க முடியாது எனவும் இராமாயணத்தின் கூறப்படும் அயோத்தி நேபாளிலேயே இருப்பதாகவும், சீதை - இராமன் திருமணம் நேபாளிலேயே இடம்பெற்றது எனவும் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவின் தற்போதைய இந்துத்வா அரசு இது குறித்து விசனம் வெளியிட்டு வருவதுடன் நேபாள் பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவிக்கிறது. இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் பல்வேறு இந்து அடிப்படைவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment