இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து பொது சுகாதார அதிகாரிகள் இன்று நண்பகலுடன் விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான பாதுகாப்புடன் தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழலால் இப்பணியைத் தொடர முடியாதுள்ளதாக சுகாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக பல இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் - பொதுமக்கள் முறுகல்கள் இடம்பெற்று வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment