போலிக் கடவுச்சீட்டு விவகாரத்தில் 2015ல் பரபரப்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றம்.
இரு கடவுச்சீட்டுகள், இரு அடையாள அட்டைகள் என போலியான ஆவணங்களை வைத்திருந்த நிலையில் 2015 பெப்பரவரியில் சஷி வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்ததுடன், விமல் வீரவன்சவும் இவ்வாறே போலி ஆவணங்களுடன் கடவுச்சீட்டு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராகாத விமலின் மனைவிக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment