முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது கட்டிட நிர்மாண பகுதியொன்றில் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னணியில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை வரை நீர் விநியோக குழாய்கள் இணைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை பரிசோதிக்கச் சென்ற இடத்திலேயே தெவரப்பெருமவுக்கும் - பணியாற்றும் நிறுவன ஊழியர்களுக்குமிடையில் தர்க்கம் உருவாகி கைகலப்பில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையிலேயே மாரடைப்பிலிருந்து மீண்டு வந்திருந்த பாலித தற்போது மீண்டும் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment