நமது உரிமைகளை பறிப்பதற்கும், அனுபவமுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தோற்கடிக்கவுமே இந்த கத்துக்குட்டிகளை களமிறக்கியுள்ளார்கள் என தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காாங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம்.
எனினும் இது சாத்தியமாகப்போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும் அவர்களுக்கு கிடைக்கின்ற சன்மானத்திக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்.
இந்தவிடயத்தில் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டும். தேவையான சந்தர்ப்பத்தில் இந்த சமூகத்தின் இருப்புக்கு குந்தகம் ஏற்படுகின்றபோது அவற்றை நாங்கள் நேருக்குநேர் முகம்கொடுத்து எமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளோம். ரத்ன தேரரின் உண்ணாவிரதம், ஞானசார தேரரின் கொதிப்பான பேச்சு என்பன பற்றி உங்களுக்கு தெரியும். அதன்போது நாங்கள் கூட்டாக இராஜினாமா செய்ததன்மூலம் இந்த சமூகத்திற்கெதிரான திட்டமிடப்பட்ட பாரிய வன்முறையை நிறுத்த முடிந்தது. கடந்த காலங்களில் எங்களின் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் தற்போது எம்மோடு இணைந்து எமது வெற்றிக்காக செயலாற்றும்போது இந்த கத்துக்குட்டிகள் தொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் அக்குரணையில் வைத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment