இனவாதம்: சம்பத் வங்கியைக் கைவிடும் மங்கள! - sonakar.com

Post Top Ad

Friday, 3 July 2020

இனவாதம்: சம்பத் வங்கியைக் கைவிடும் மங்கள!

https://www.photojoiner.net/image/6k0xd0Zl

சம்பத் வங்கியின் தெஹிவளை கிளையில் நேற்றைய தினம் முஸ்லிம் பெண்ணொருவர் தலை மறைப்பையும் விலக்கி விட்டே உள் நுழைய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வாத விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், சம்பத் வங்கியின் பங்குதாரர்களுள் ஒருவரான நிமல் பெரேரா, குறித்த வங்கி பௌத்தர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட வங்கியென விளக்கமளித்துள்ளார். இதனை மேற்கொள் காட்டி பதிலளித்துள்ள மங்கள, அனைத்து இலங்கையருக்குமில்லாது குறித்த இனத்துக்கான வங்கியென தெரிவிக்கும் ஒரு வங்கியில் தமது பணத்தை வைத்திருக்க விரும்பவில்லையென விளக்கியுள்ளதோடு வேறு வங்கிக்கு மாற்றும் படி தமது அலுவலகத்தைப் பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் பற்றி விசாரணை இடம்பெறும் என நேற்றைய தினம் சம்பத் வங்கி தெரிவித்த போதிலும், அவ்வாறு ஒரு சுற்றறிக்கை வங்கியில் பகிரப்பட்டுள்ளதனாலேயே இக்குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Sano said...

we muslims should avoid sampath bank. I gonna close my account insha'allah on Monday.

Post a Comment