பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் நாட்டுக்கு இரும்புக் கதவு போடலாம் என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
தற்போது சலூன் கடைக் கதவு போல் திறந்தே கிடக்கும் நாட்டின் அரசியல் சட்டங்கள் இரும்புக் கதவிட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விளக்கமளித்துள்ள அவர், அதனைக் கொண்டே நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவிக்கிறார்.
பல வெற்றிகளைக் கண்ட நாடான இலங்கையை இன்னும் உறுதியான நாடாக்குவதற்கு உறுதியான அரசியலமைப்பு தேவைப்படுவதாகவும் அதனை உருவாக்க வேண்டும் எனவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment