பிறப்புச் சான்றிதழ் மாற்றத்தை அனுமதிக்க முடியாது: விமல் போர்க் கொடி! - sonakar.com

Post Top Ad

Thursday, 23 July 2020

பிறப்புச் சான்றிதழ் மாற்றத்தை அனுமதிக்க முடியாது: விமல் போர்க் கொடி!


புதிய பிறப்புச் சான்றிதழில் தாய் - தந்தையரின் 'இன' விபரம் இணைக்கப்படவுள்ள போதிலும், பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்ப படிவத்தில் குழந்தையின் இன விபரம் இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லையென நேற்றைய தினம் தலைமை பதிவாளர் என்.சி விதானகே தெரிவித்திருந்தார்.

எனினும், அது தவறு எனவும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கின்ற விமல் வீரவன்ச, இது தொடர்பில் தாம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேசியிருப்பதாகவும் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கிறார்.

அந்த அடிப்படையில் புதிய பிறப்புச் சான்றிதழை இந்த அரசாங்கம் அனுமதிக்காது எனவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment