தப்பியோடிய நபரை பிடிக்க உதவியவர்களுக்கு பணப் பரிசு - sonakar.com

Post Top Ad

Friday, 24 July 2020

தப்பியோடிய நபரை பிடிக்க உதவியவர்களுக்கு பணப் பரிசு


இன்று அதிகாலை ஐ.டி.எச்சில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய நபரை பிடிக்க உதவிய தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு பணப்பரிசு வழங்கவுள்ளதாக பொலிசார் தெரவிக்கின்றனர்.

அதிகாலையில் தப்பியோடிய நபர் புறக்கோட்டை, மெயின் வீதியிலும் உலவி விட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று, அங்கு இரு ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி, தான் தேடப்படுவதாகவும் குறித்த நபரே விளக்கமளித்திருந்த நிலையில், ஊழியர்கள் உடனடியாக பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இப் பின்னணியில் குறித்த நபரை மீண்டும் சிகிச்சைக்காக ஐ.டி.எச்சில் அனுமதித்துள்ள அதேவேளை தப்பியோடிய வேளையில் ஏறிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப் பட்டுள்ளார். இந்நிலையில், உடனடியாக தகவல் வழங்கிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment