வாகனத்தால் மோதி 64 வயது நபர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தேசிய கிரிக்கட் வீரர் குசல் மென்டிசுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பகுதியில் குசாலின் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இழப்பீடாக 1 மில்லியன் ரூபா தருவதாக கூறிய குசல் தரப்பினர் இன்று முற்பணமாக 2 லட்ச ரூபா வழங்கியுள்ளனர்.
இப்பின்னணியில், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment