ரஷ்ய பெண்ணிடம் அத்துமீறல்: ஐவர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 July 2020

ரஷ்ய பெண்ணிடம் அத்துமீறல்: ஐவர் கைது

.net/image/

கடந்த ஞாயிறு இரவு காலிமுகத்திடலில் ரஷ்ய பெண்ணொருவரிடம் அத்துமீறியதோடு அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற இளைஞர் குழுவில் ஐவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த வேளையில் 20 நிமிடம் கழித்து அங்கு பொலிசார் சென்றிருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லையென குறித்த பெண் சமூக வலைத்தளம் ஊடாக தமக்கு நடந்த அநீதியை வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எனவும் அவர் கேட்டிருந்த நிலையில் குறித்த காணொளி வேகமாக பரவியிருந்தது.

இந்நிலையில், தற்போது ஐவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment