பொலிசாரால் கைப்பற்றப்படும் போதைப் பொருளை மீண்டும் இரகசியமாக பாதாள உலகத்தினருக்கே விற்பனை செய்து வந்த பொலிஸ் குழுவினர் முடக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவர் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர் இன்று காலை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
வெலிவேரியவில் குடியிருந்த குறித்த நபர் தேடப்படுவதாக நிழற்படமும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவர் சரணடைந்துள்ளார். இவ்வாறு போதைப் பொருள் விற்ற பொலிஸ் குழுவினரிடமிருந்து பெருந்தொகை பணம், சொத்துக்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment