கடந்த ஜனாதிபதி தேர்தலை தன்னை நம்பி அதிகளவான வாக்குகளையளித்த கிழக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததும் ஓட்டமாவடி - வாழைச்சேனை உட்பட பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகளை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற அவரது பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், நவீன தொழில் பேட்டைகளை அமைத்து இளைஞர் - யுவதிகள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் ஊரிலேயே தொழில்வாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீடில்லா பிரச்சினைக்குத் தீர்வளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதோடு விவசாய சமுகத்திற்கு நெல் களஞ்சிய சாலை அமைத்துஈ விழாலோடை மற்றும் மூக்கிரயன் ஓடை திட்டத்தை எதனது நேரடிக்கண்காணிப்பில் செய்து தரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment