எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரமுன தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவது உறுதியென தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றியை தமது கட்சி தக்க வைத்துக் கொள்ளும் எனவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று பாரிய வெற்றியீட்டும் எனவும் உள்ளூராட்சி தேர்தல்களில் கிடைத்தது போன்ற பெறுபேற்றை எதிர்பார்க்குமாறும் தமது ஆதரவாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்ற பெயரில் முடங்கிப் போன மக்களுக்கு பெரமுனவே எழுச்சிப் பாதையெனவும் அலவ்வயில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment