ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் தொடர்பில்லையென கடந்த வருடம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த கடிதம் இனி செல்லாது என விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன.
அக்காலப் பகுதியில் இல்லாத புதிய சாட்சியங்களும் ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலேயே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனடிப்படையிலேயே எதிர்கால முடிவுகள் அமையும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஏலவே ரிசாத் பதியதீனின் சகோதரன் இப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, கடந்த வருடம் தாக்குதலை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொலிஸ் மா அதிபர் ரிசாத் பதியுதீனுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லையென கடிதம் வழங்கியிருந்ததாகவும், தற்போது நடப்பதெல்லாம் அரசியல் பழிவாங்கல் எனவும் ரிசாத் தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment