இலங்கையில் காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
காணி மோசடி மற்றும் காணிப் பதிவில் ஏற்படும் தாமதங்களைக் களையும் நோக்கில் இது தொடர்பில் துரித நடவடிக்கை அவசியப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்சமயம், காணிப் பதிவுகளுக்கு நீண்ட காலம் எடுப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் உறுதிப் பத்திரங்களை இலத்திரனியல் மயப்படுத்துவதன் ஊடாக மோசடிகளைத் தவிர்த்து, செயற்பாட்டைத் துரிதப்படுத்த முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment