ஜிந்துபிட்டியிலிருந்து பல குடும்பங்கள் முகாமுக்கு அனுப்பி வைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 3 July 2020

ஜிந்துபிட்டியிலிருந்து பல குடும்பங்கள் முகாமுக்கு அனுப்பி வைப்பு


கொழும்பு 13, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டறியப்பட்டதாக தெரவிக்கப்படும் நிலையில் அங்கிருந்து 154 பேர் தற்போது தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரே நேற்று நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரின் உறவினர்கள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த 29 குடும்பங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், கொழும்பில் மீண்டும் கொரோனா பரவல் இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை சுகாதார பணிப்பாளர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment