கல்முனை உப செயலகத்தை 'மஹிந்த' தருவார்: ஞானசார! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 July 2020

கல்முனை உப செயலகத்தை 'மஹிந்த' தருவார்: ஞானசார!


கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் கட்டாயம்  பெற்றுத்தருவதாக தெரிவிக்கிறார் பொது பல சேனா ஞானசார.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதிக்கு  புதன்கிழமை (15) இரவு சென்றிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு உண்ணாவிரதம் இருந்தவருமான  சந்திரசேகரம் ராஜன் இடைநடுவில் மறித்து  கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் கடந்த கால வாக்குறுதி  என்னவானது என  கேள்வி எழுப்பியிருந்தார்.

அங்கு மாநகர சபை உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை  இவ்வாட்சியில் தரம் உயர்த்தி தருவதாகவும் எனவே அவசரப்படாமல் எதிர்பார்த்து காத்திருக்குமாறு கூறி அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றார்.

மேலும் பெரிய நீலாவணை வீட்டுத் திட்டத்தில் ஒரு சிங்கள தாயாருக்கு  ஏற்பட்ட சுகவீனத்தை அடுத்து நலன் விசாரிப்பதற்காகவே தான் வந்ததாகவும் ஞானசார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment