ரஷ்ய பெண்ணொருவரை காலி முகத்திடலில் தரக்குறைவாகப் பேசி 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பிலான காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதோடு பொலிசில் முறைப்பாடும் செய்துள்ளார்.
தனது நண்பர்களுடன் அங்கு சென்றிருந்த குறித்த பெண்ணிடம் தரக்குறைவாகப் பேசி, அத்துமீறலில் ஈடுபட முயன்ற பிரதான நபரையே இங்கு படத்தில் காண்கிறீர்கள். இவரைப் பற்றிய தகவலை தந்துதவுமாறு குறித்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment