சிங்கள தேசத்தினையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றப் போகிறார் என்றே கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதியாக்கிய போதிலும் குருநாகலில் பண்டைய அரச மண்டபம் ஒன்று நகரின் மேயரால் இடித்துத் தள்ளப்பட்டிருப்பது பல கேள்விகளை உருவாக்கியிருக்கிறது என்கிறார் ஞானசார.
இதேவேளை, பொது அறிவற்ற 8ம் தரம் கூட சித்தியெய்தாத மூடர்களாலேயே இவ்வாறான காரியத்தை செய்ய முடியும் என தயாசிறி ஜயசேகரவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும், 2ம் புவனேகபாகுவின் அரச மண்டபம் எனக் கருதப்படும் குறித்த இடம் இடிக்கப்பட்டதை விட பாரதூரமான விடயங்கள் நாட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் எதிர்க்கட்சியினர், குறிப்பாக சஜித் பிரேமதாச இதனைத் தூக்கிப் பிடிப்பதாகவும் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் வைத்து மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment