எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அனைத்து பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும் இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
சிறிய அளவிலான கூட்டங்களை முன்னெடுப்போர் சுகாதார பணிப்புரைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மீண்டும் கொரோனா அபாயம் உருவாகியுள்ள நிலையில் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் 13, 14 மற்றும் 15ம் திகதியின் பிரதான பிரச்சாரக் கூட்டங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment