ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 July 2020

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை (20) ம் திகதி திங்கட்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் இரண்டு வருடங்களின் பின்னர் அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எம்.நெளபருக்கு தவிசாளர் பதவியை வழங்குவதாக ஒப்பந்தப் ஒன்றில் கைச்சாத்துட்டுள்ளது.

அதற்கமைய தவிசாளர் பதவியை ஐ.ரீ.அஸ்மி இராஜினாமா  செய்துள்ளதோடு, உத்தியோகபூர்வமாக ஏ.எம்.நெளபர் தெரிவு செய்யப்படும் வரை பிரதித் தவிசாளராக பதவிபுரிந்த யூ.எல்.அஹ்ட் லெவ்வை இடைக்கால தவிசாளராக  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment