நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக் கொண்டு கொழும்பு உல்லாச ஹோட்டல்களில் கூடி கோடி கோடியாக பணத்தை விரயப்படுத்தியதே நல்லாட்சி என்ற பெயரில் கடந்த காலத்தில் நடந்தது என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
யுத்தம் நிறைவுற முன் பாதுகாப்பு செலவுக்கு பணம் வேண்டும் என்றார்கள், அதன் பின் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிட முன்னராக கல்வி, சுகாதார தேவைகள் இருப்பதாகக் கூறி காலத்தைக் கடத்தினார்கள். ஆனால், எங்கள் ஆட்சியின் போது அவ்வாறு செயற்படாது யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டையும் அபிவிருத்தி செய்தோம் என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
எதிர்காலத்தில் அம்பாறையை சுற்றுலா பிரயாணிகளைக் கவரும் இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment