முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர இன்றைய தினம் எட்டு மணி நேர விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஓகஸ்ட் 7ம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட ஷானி, முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தன வசமிருந்த ஆயுதங்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரிபு படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஷானி அபேசேகரவே விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment