கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்து பின் வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டறியப்பட்ட நபருக்கு, ஜாஎல - சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த போதைப் பொருள் பாவனையாளர்களிடமிருந்தே வைரஸ் பரவியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மையத்தின் ஊழியர்கள் உள்ளடங்கலாக நேற்றைய தினம் 300 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த அதேவேளை தற்சமயம் வெலிசர கடற்படை முகாம் போன்ற சூழ்நிலையே நிலவுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார பணிப்புரைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment