நேற்றைய தினம் மாத்திரம் 300 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் லொக்டவுன் சூழ்நிலை உருவாகுமா எனும் அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது. எனினும், அவ்வாறு எந்த எண்ணமும் இல்லையென தெரிவிக்கிறார் டி.ஐ.ஜி அஜித் ரோஹன.
கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட தொற்று வெலிசர கடற்படை முகாமில் ஏற்பட்டது போன்ற நிகழ்வெனவே தற்சமயம் விளக்கமளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இல்லாத பட்சத்தில், பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனவும் அஜித் ரோஹன எச்சரித்துள்ளமையும் சமூக மட்டத்திலான பி.சி.ஆர் பரிசோதனைகளை நடாத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment