பிரபல பாதாள உலக பேர்வழி அங்கொல லொக்கா இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இம்மாதம் 3ம் திகதியளவில் குறித்த நபர் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கொட லொக்காவுடன் வாழ்ந்த பெண்ணொருவர் ஊடாக 'எதிரிகள்' இவ்வாறு நஞ்சூட்டியுள்ளதாகவும் இறுதிக் கிரியைகள் இந்தியாவில் நடந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான பாதாள உலக பேர்வழிகள் இந்தியா மற்றும் டுபாயில் இருந்து தமது குற்றச்செயல்களை இலங்கையில் வழி நடாத்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் பொலிசார் இதனை உறுதி செய்து கொள்ளும் நிமித்தம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment