கொரோனா தொற்றினை 'சிறு காய்ச்சல்' என வர்ணித்ததோடு அதற்கெல்லாம் பயப்படப் போவதில்லையென தெரிவித்து வந்த பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோ தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், தான் நலமாகவே இருப்பதாக தெரிவிக்கின்ற அவர், நாட்டின் பல இடங்களில் அமுலில் இருந்த கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொல்சனாரோவுக்கு தற்போது 65 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment