வாகன விபத்துகள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் மரணம் நிகழும் விபத்துகள் நிகழுமிடத்து சாரதி மீது கொலைக்குற்றம் சாட்டப்படவுள்ளதாக தெரிவிக்கிறது பொலிஸ்.
கவனக்குறைவு, விதிகளை உதாசீனம் செய்து வாகனங்களை செலுத்துதல் போன்ற பின்னணியிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடயில் அண்மையில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிப்பாய் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் மேலும் இருவர் காயமுற்றிருந்தனர். இவ்வழக்கிற்கான ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலேயே பொலிசார் இவ்வாறு தெரிவிப்பதுடன் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இதற்கான அனுமதியுண்டு எனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment