பொய்ப் பரப்புரைகளுக்கு நேரில் சென்று பதிலளித்த மஹேல! - sonakar.com

Post Top Ad

Friday, 3 July 2020

பொய்ப் பரப்புரைகளுக்கு நேரில் சென்று பதிலளித்த மஹேல!


2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த சர்ச்சைக் கருத்தின் பின்னணியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய தினம் முன்னாள் தேசிய அணி தலைவர் மஹேல ஜயவர்தன விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் இரவு வேளையில் இன்றைய விசாரணையை இரத்துச் செய்துள்ளதாக மஹேலவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மஹேலவே விசாரணையைத் தள்ளிப் போட்டதாகவும் போலிச் செய்திகள் பரவியதன் பின்னணியில் அங்கு நேரடியாகச் சென்ற அவர், விசாரணையில்லையெனத் தெரிந்தும் அங்கு சென்ற காரணம், தான் விசாரணைக்குத் தயாராகவே இருப்பதை தெளிவுபடுத்தவே என விளக்கமளித்துள்ளார்.

ஹோமாகமயில் புதிய மைதானம் ஒன்றை உருவாக்குவதற்கு இப்போது அவசியமில்லையென மஹேல கருத்துரைத்ததிலிருந்து பல்வேறு அழுத்தங்களுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment