கலம் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று (21.07.2020) இடம்பெற்றது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் MMM. நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கலம் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் வரலாற்றுப்பின்னணியுடன் வரவேற்புரையை பிரதம பதிப்பாசிரியர் கலாநிதி MM. பாஸில் வழங்கியதுடன் அதனைத் தொடர்ந்து பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கரின் பீடாதிபதி உரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலம் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பணம் உப வேந்தரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் பீடாதிபதி, பிரதம பதிப்பாசிரியர், இணைப்பதிப்பாசிரியர், துறைத்தலைவர்கள் இதில் இணைந்து கொண்டனர். தொடர்ந்து பிரதம அதிதியின் உரை இடம்பெற்றது. உப வேந்தர் பேராசிரியர் MMM. நாஜிம் அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் இணைப்பதிப்பாசிரியர் திரு MAM. பௌசர், பேராசிரியர்கள், நூலகர் MM. றிபாயுடீன், சிரேஷ்ட உதவி நூலகர்கள், துறைத்தலைவர்கள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-Dr. M.M.Fazil
No comments:
Post a Comment